Sunday 13 January 2019

தலித்தியமும் பாரதியும்


தலித்தியமும் பாரதியும்



சென்னை போன்ற பெருநகரங்களில் புத்தகக்கண்காட்சிக்கு செல்வது பேரின்பம், மலைக்க வைக்கும் புத்தக குவியலின் வழியே மனம் ஊடி செல்லும், புத்தகங்களின் வாசமும் வாசகக்கூட்டமும் ஊர் திருவிழாவுக்குள் ஒரு நூலகம் இருப்பது போல பிரமையை ஏற்படுத்தியது. பல அறிவு  தேடலோடு பாயும் மனிதர்களின் வீச்சு என்  தன்னிலை குலைத்தது, எனக்கான தூரத்தையே நான் இதுவரை நிர்ணயித்தது இல்லை, ஆம் இங்கே முழு மூச்சுடன் ஓடி எல்லை என ஒன்றை வகுத்து அதை அடைய யாரும் முயற்சிப்பது இல்லை, புத்தகங்கள் என்றும் எனக்குள் மோதி நான் சரியென்று நினைக்கும் பல கருத்தியல்களை உடைக்கும் புதிய கருதுகோள்களை உருவாக்கி அதன் வழியே என்னை பயணிக்க வைக்கும்.  
இந்த புத்தகக்கண்காட்சியில் ஆயிரத்திற்கு சற்று  குறைவான விற்பனை நிலையங்கள் பல பதிப்பகங்கள்  நிறுவி இருந்தன, எஸ் ராமகிருஷ்ணன், சாரு நிவேதிதா, மனுஷ்யபுத்திரன்இயக்குனர் கௌதமன், அரசியலாளர் தொல்.திருமாவளவன் என பலரை நேரில் பார்க்க நேர்ந்தது, சிறு புன்னகை தரித்து தன்னுடன் உரையாடும் வாசர்களுடன் அவர்கள் கடந்து போகும் அந்த நிமிடங்கள்தான் அவர்களை மேலும் மேலும் எழுதி குவிக்க வைக்கிறது, ஒவ்வொரு முதல்நிலை  வாசகனும் தன்னை ஒரு எழுத்தாளனோடு பொருத்தி அதன் வழியே தன் அறிவு சூழலை உருவாக்குகின்றான் , அதன்பின் அது வேறுபடும், பல நதிகள் போல் பிரியும் என்னென்ன திசைகள் உண்டோ அங்கெல்லாம் பறக்கும் பறவையை போல் பறந்து ஓரிடத்தில் நிலையா நில்லாது இந்த அறிவுவெளியில் சுற்றி திரியும்.
'உப்புவேலி' நான் விரும்பிய புத்தகம், பல விற்பனை நிலையங்கள் சுற்றியும் கிடைக்கவில்லை ஒருவேளை இன்னும் சுற்றி இருக்க வேண்டும் போல, ஆனால் எதிர்பார்ப்பை விட வேறு புத்தகங்கள் வாங்கினேன், காலச்சுவடு விற்பனை நிலையத்தில் என் நாஞ்சில் தமிழில் அவர்களோடு  கலந்துரையாடிய சில நிமிடங்கள்  நாகர்கோயில் சென்று  வந்த மகிழ்ச்சி,


பெரியாரிய தலித்திய சிந்தனையாளர்களின் விற்பனை நிலையங்களில் பல ஆயிரம் புத்தகங்கள் அடிமைத்தனம் பூண்ட விலங்கினை உடைத்த பெரும் வரலாற்றை உணர்த்தியும், அவர்தம் இவ்வாழ்க்கை நிலை அடைய பெரும் போராட்டங்களை முன்னின்று வழி நடத்திய பெருந்தலைவர்களின் வாழ்வியல் புத்தகங்கள் என பலதரப்பையும் பேசிய புத்தகங்கள் நிரம்பிய பெருங்கடலாய் பொங்கியிருந்தது , பெரும் முரணாய் பாரதியின் புத்தங்களை நான் அங்கே காணக்கிடைக்கவில்லை, ஏன் தலித்தியம் பெண்ணியம் பேசும் என் பெரும்பான்மை நண்பர்கள் பாரதியை மேற்கோள் கருதி ஒரு அறிவியக்கமாக உரையாடிய களங்களை என் பெரும்பான்மையான நாட்களில் கண்டதும் இல்லை, கேள்வி பட்டதும் இல்லை.
இவ்வினா பல நாட்களை என்னை துருக்குறச்செய்த வினா, ஏன் பாரதியை மட்டும் இவர்கள் முன்னிறுத்துவது இல்லை, பல தலித்திய பெரியாரிய செயற்பாட்டார்கள் நிகழ்த்தாத மாற்றங்களை அன்றே நிகழ்த்தியவன் பாரதி தன் எழுத்தின் மூலம், தலித்தியம் சாதியையும், பெரியாரியம் மதத்தையும் பெரும் விமர்சனத்துக்கு உட்படுத்தி அதன் திசையின் வழியே மட்டும் பகுப்பாய்கிறது, ஆனால் பாரதியின் கருத்தியல் இதனை வேறு தளத்தில் பகுப்பாய்கிறது. என் புரிதலின் படி பாரதி ஒரு  மாற்று கருத்தியல் கொண்ட சமூக சீர்திருத்தவாதி.
ஒருவேளை பாரதி மட்டும் இன்று அனைத்து சமூக செயற்பாட்டார்களும் திராவிடம், தலித்தியம், பெரியாரியம் மொத்தமாய் எதிர்க்கும் பார்ப்பனாய் பிறந்ததாலோ. சாதி ஒழிப்பு போராளிகள் சாதியின் காரணமாய் பாரதியை மற(றை )ப்பது எப்படி சாதி மறுப்பாகும் .
தொடர்ந்து உரையாடுவோம்  (மேற்கூறிய அனைத்தும் என் புரிதலின் படியே)

   


                    

No comments:

Post a Comment

இணைந்த கைகள்

  ஒரு மாலைநேரம், புதிய திரைப்படம். திங்கள் கிழமை,  மாலை நேரக்காட்சி,  இணைந்த கைகள்.  நிதானியுங்கள், அதே நேரம் உங்கள் மனைவி, அரசு மருத்துவமனை...