Wednesday 23 January 2019

செல்பி வித் அக்கியூஸ்ட்  : 



2015-ஆம் ஆண்டு தலை துண்டிக்கப்பட்டு முகமும் சிதைக்கப்பட்ட நிலையில் இளைஞர் ஒருவரின்  உயிரற்ற உடல் இரயில்வே ஊழியர் மூலம் காவல்துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு பின் விசாரணையில் அவர் சேலம் ஓமலூரை சேர்ந்த பட்டதாரி கோகுல்ராஜ் என்று தெரிய வருகிறது, இந்த வழக்கை விசாரிக்கும் பொறுப்பை  காவல்துறை அதிகாரி  விஷ்ணுபிரியா ஏற்கிறார்.

இது ஒரு கௌரவ கொலை என அனைத்து ஊடகங்களும் செய்தி  வெளியிடுகின்றன, அதிர்ச்சியடையும் வகையில் சில மாதங்களில் விஷ்ணுபிரியா தற்கொலை செய்துகொள்கிறார், மிக வலிமையான பெண் அவர் என அவரின்  தோழிகள் இந்த மரணத்தை சந்தேக மரணமாக கருத, சி பி சி ஐ டி இந்த வழக்கை கையில் எடுக்கிறது, இந்நிலையில் தீரன் சின்னமலை பேரவை அமைப்பின் தலைவர் யுவராஜ் இந்த வழக்கில் குற்றவாளி என காவல்துறை கைது செய்கிறது.

கொலைக்கான காரணம் கோகுல்ராஜ் தன்னுடன் கல்லாரியில் பயிலும் யுவராஜின் சாதியை சார்ந்த பெண்ணை காதலித்திருக்கிறார், இருவரும் கொலை நடப்பதற்கு முந்திய நாள் திருசெங்கோடு கோவிலுக்கு சென்றிருக்கின்றனர், அங்கிருந்து அதை கண்ட யுவராஜ் அந்த பெண்ணை கண்டித்து கோகுலை தனியாக காரில் அழைத்து சென்றுள்ளார், இவை அனைத்தும் அங்கிருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகி உள்ளது.

இந்த வழக்கு நாமக்கல் முதன்மை மற்றும் அமர்வு நீதிமன்றத்தில் நீதிபதி இளவழகன் முன்னிலையில் இன்றும்  மட்டுமே நடைபெற்று வருகிறது. அரசு சிறப்பு வழக்கறிஞர் கருணாநிதி, கோகுல்ராஜின் தாயார் சித்ராவின் வழக்கறிஞர் நாராயணன் மற்றும் யுவராஜ் தரப்பு வழக்கறிஞர் கோபால கிருஷ்ண லட்சுமண ராஜூ மேலும் அரசு சிறப்பு வழக்கறிஞர் ப.பா.மோகன் புதிதாக இந்த வழக்கில் இணைந்துள்ளார்.

இப்போதுதான் இவ்வழக்கு இறுதி கட்டத்தை நெருங்கி இருக்கிறது, இதில் முரண் என்னவென்றால் காதலித்த அந்த பெண்ணே கோகுல்ராஜை கல்லாரியில் படிப்பவர் என்ற முறையில் தெரியும் என்றும் தற்போது யுவராஜ்க்கு ஆதரவான நிலைப்பாட்டை எடுத்துவிட்டார்,  யுவராஜ் தரப்பு வழக்கறிஞர் கோபால கிருஷ்ண லட்சுமண ராஜூ குறுக்கு விசாரணையில் அனைத்துமே பொய்யான சாட்சி என்ற முறையில் வாதாடுகிறார்.

நெடுங்காலமாக இந்த வழக்கை கவனிக்கும் போது இந்திய நீதி துறையின் மேலான மதிப்பு முற்றிலுமாக குறைந்து விட்டது, யுவராஜ் குற்றவாளி இல்லையென கூற முடியாத அளவு சாட்சிகள் அவை அனைத்தும் 2015 முதல் விசாரிக்கப்பட்டு இன்றும் 2019 வரை நீதிமன்றத்துக்கு வந்து சாட்சி கூற வேண்டும் இது போக லட்சுமண ராஜூ போன்ற முதிர்ந்த பழுத்த அரசு நீதி துறையின் ஓட்டைகள் அனைத்தும் அறிந்த  வழக்கறிஞரின் குறுக்கு விசாரணையில் பதில் கூற வேண்டும், வருட இடைவெளியில் சாட்சிகள் சில முக்கிய தடயங்களை மறக்க சிலநேரங்களில் மறைக்க காரணமாகிறது. இது இந்த வழக்கை நீர்த்து போக செய்யலாம்.ஒருவேளை யுவராஜ் தரப்பின் படி அவர் குற்றம் செய்யவில்லை என்ற கோணத்தில், இந்த வழக்கின் தீர்ப்பு வெளியாகி, காவல் துறை மீண்டும் குற்றவாளி யார் என கண்டறிய மறுமுறை விசாரணையை ஆரம்பிக்க வேண்டும் .

விஷ்ணுபிரியா, கோகுல்ராஜ் இருவருக்குமே உரிய நீதி கிடைக்குமா என சந்தேகமே, இந்த வழக்கின் சாட்சிகளும் வழக்கறிஞர்களும் நீதிபதியுமே இதை முடிவு செய்ய போகின்றனர், சாமானியன் என்னால் என்ன செய்ய முடியும், என்னை வருந்த செய்தது என் வயதொட்டிய இளைஞர்கள் யுவராஜ் நீதிமன்றம் வரும் போது அவனுடன் செல்பி எடுக்கின்றனர், அவனை கொண்டாடுகின்றனர், என்னால் இயல்பாக கடந்து போக முடியவில்லை, இதுவே இவ்வழக்கை என்னை தொடர்ந்து கவனிக்க செய்தது.

சாதி  நம் தலைமுறையில் பெரிதும் மாற்றி கட்டமைக்கப்படும் என்றே கருதுகிறேன், இது போன்ற வழக்குகள் அச்சம் கொள்ள வைக்கின்றன, வடமாவட்டங்களில் பெரும் ஆதிக்கம் செலுத்தும் சாதியை சார்ந்த நண்பன் மிகவும் படித்தவர், பன்னாட்டு நிறுவனத்தில் வேலை செய்பவர் தருமபுரி இளவரசன் கொலைவழக்கில் திவ்யாவின் தந்தை செய்தது சரி என்ற போதெ அப்பகுதி சாதிய அடிப்படைவாதம் என்னை துருக்குற செய்தது, இந்தியகண்டம் முழுவதும் இந்த சாதிய அடிப்படைவாதம் இப்படியே இயங்குகிறது , எப்படி ஒரு சாரார் சாதி எனும் பிம்பத்தை உடைக்க முயற்சி செய்கின்றோமோ அதே அளவு மறுதரப்பும் சாதியை இதே வேகத்தில்  கட்டமைக்கிறது,  எத்தனை நூற்றாண்டுகள் ஆகுமோ சாதி நீலம் பிடிக்க !       

  
x

No comments:

Post a Comment

இணைந்த கைகள்

  ஒரு மாலைநேரம், புதிய திரைப்படம். திங்கள் கிழமை,  மாலை நேரக்காட்சி,  இணைந்த கைகள்.  நிதானியுங்கள், அதே நேரம் உங்கள் மனைவி, அரசு மருத்துவமனை...